Ragu Kethu Peyarchi Palan

Ragu Kethu Peyarchi Palan

    KANNI Ragu Kethu Peyarchi Palan

கன்னி ராசி நேயர்களே : கடந்த ஒன்றை ஆண்டுகளாக உங்கள் ராசிக்கு 8ம் இடமான ஆயுள் ஸ்தானத்தில் ராகு பகவான், உங்கள் ராசிக்கு 2ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையில் பல்வேறு சங்கடங்களையும், எதிர்பாராத தடைகளையும் வழங்கி வந்தார்கள். இந்த நிலையில் தான் 08.10.2023 அன்று ராகு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடமான சப்தம ஸ்தானத்திற்கும் - கேது பகவான் ஜென்ம ராசிக்கும் பெயர்ச்சியாகி 26.04.2025 வரை அங்கிருந்து உங்களுக்கு ஒன்றை ஆண்டுகளுக்கு பலன்களை தர உள்ளார்கள். உங்களுக்கு தனவரவு நன்றாக இருந்தாலும், அதே அளவுக்கு செலவுகளும் ஏற்படும். வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுப செலவுகள் இருக்கும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனமாக நடந்து கொள்வது முக்கியம். ஒரு சில தடைகள் உங்கள் முயற்சிகளின் வேகத்தினைக் குறைக்கும். நீங்கள் சிறுசிறு பிரச்னைகளுக்குக் கூட துவண்டு போகும் வாய்ப்பு உண்டு. மனதில் நல்ல பல சிந்தனைகளும், எந்த ஒரு விஷயத்திலும் அதிக ஈடுபாடும் தோன்றும்.
இதனால் பல சமயங்களில் அடுத்தவர்களுக்காக விட்டுக் கொடுத்துச் போக வேண்டிவரும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிடையே நெருக்கம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. எதிர்பாராத வகையில் உதவி கிடைக்க பெற்று மேன்மை ஏற்படும். உடல் நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சீராகும். உற்றார், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். முன் பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு ஜாமின் கொடுக்க வேண்டாம். வம்பு, வழக்குகளில் சற்று இழுபறி நிலை நீடிக்கும். குடும்ப விஷயங்களில் உண்டாகும் பிரச்னைகளை எளிதில் தீர்க்க வழி கிடைக்கும். உடன்பிறந்தோர் உங்களால் ஆதாயம் அடைவர். உங்கள் வாழ்க்கைத்துணைவரின் செயல்பாடுகள் உங்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். குடும்ப விஷயங்களில் அவரது கருத்துக்களோடு ஒத்துப்போவது நல்லது. ஏழாம் இடத்து ராகுவினால் முறையில் தூரத்து பிரயாணம் செல்லும் வாய்ப்பு உண்டு. புதிய நண்பர்களின் சேர்க்கை உருவாகும். பெண்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும்.
ராகுவின் சஞ்சார நிலை தேவையற்ற நட்பு வட்டாரத்தை ஏற்படுத்தும். அடுத்தவர்களின் குணம் அறிந்து பழக வேண்டியது அவசியம். ஜென்ம ராசியில் வந்து அமர உள்ள கேது பகவான் விரக்தியான மனநிலையைத் தருவார். கடமையைச் செய்வதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும்.
உத்யோகத்தில் உங்கள் பணிகளை கவனமாக மேற்கொள்ளவும். உத்யோகத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் வந்து சேரும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கும் வாய்ப்பும் உண்டாகலாம். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் தங்கள் பாதுகாப்பில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். செய்யும் தொழிலில் புதிய முயற்சி கள் மூலம் நல்ல தன லாபத்தினைக் பெற முடியும். கூட்டுத்தொழில்கள் லாபகரமாக அமையும்.
உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வரும் ஒன்றரை ஆண்டு காலமும் பெரிதாக பாதிப்புகள் ஏதும் நேராது என்றாலும் புதிய மனிதர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக உழைத்தால் மட்டுமே இந்த சோதனைக்குரிய காலத்தில் முன்னேற முடியும். மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, உங்களை கடினமாக உழைக்க வைத்து இலக்கை எட்டிப்பிடிக்க வைப்பதாக அமையும்.

( For Kanni : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Kanni (Virgo) [Stars: Uthiram 2,3,4 Hastham 1,2,3,4 Chitirai 1,2 quarters]

Proper care, maintenance, perfection, love, responsibility, stewardship, gentle, polite, and motivation are the best suitable qualities for kanni rasi people. They are very sensitive, calm and humble in many aspects including work and believe in core or traditional values to follow proper rules and regulations. Their karma works good always towards the expected goals in order to fullfill the requirements. Help on needy basis to others and never show full power under any circumstances. Though they are humble in nature, they know how to pass the orders at any level with law. Many kanni rasi people may become economist, commercial law makers, financial institutions head, producers, ministers, judges, leaders and rulers. If mercury becomes powerful with Sun in the horoscope they are ready to lead government sectors. Ladies and gentlemen are equally powered under kanni rasi. Good health and proper care will make them to live up to 85 years.

Situation based decisions are the best appreciable for kanni rasi. No one can care their family like these people and their children will be pious. Speaking naturally proverbs for quoting any work to be done to make others perfect like them. Able to list out or write everything as expected or completed as a routine activity. Keep fit or fittest of the survival suits well for most of the kanni rasi people. They are able to withstand any uneven or odd situations to resolve at best with quiet mind & wisdom. The intelligence play major role for all though their education background is low occasionally. Live with pleasure is another good nature and timely support can be given only by these people at any cost. But on the other way, some people will be taking others advice to end up in trouble; can be avoided in general. Lucky colours are green, yellow and white, stones are emerald, red coral and yellow sapphire, and numbers are 3, 5 & 6.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.